Saturday, September 26, 2009

பார்த்திபனின் புதிய 'வித்தகன்'


புதுமைப் பித்தன் பார்த்திபன் பாடலாசிரியாராகியுள்ளார். தனது இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் வித்தகன் படத்தில் உலக வெப்பமயமாதல் குறித்த பாடல் ஒன்றைப் புணைந்துள்ளாராம்.
பார்த்திபன் நீண்ட நாளுக்குப் பிறகு நடிப்பு பிளஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வித்தகன். அவரது ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். இப்படத்தில் வித்தியாசமான பார்த்தியைப் பார்க்கலாமாம்.
படத்தை செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து வருகிறார், இப்படத்தில் பார்த்திபன் ஒரு பாடலை எழுதியுள்ளார். உலக வெப்பமயமாதல் குறித்த பாடலாம் இது.
உன் சோனுல சேட்டையப் போடுஊர் சோனுல ஆட்டையப் போடுஓசோனுல ஓட்டையப் போடாதே என்று அமர்க்களமாக தொடங்குகிறது இந்தப் பாடல்.
இந்தப் பாடலை பார்க்கும்போதும், படிக்கும்போதும் தமிழ் ப் பாடல்தானா என்ற சந்தேகம் லேசாக வரும். காரணம், தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு என பல பாஷைகளைப் பிழிந்து போட்டு வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறார் பார்த்தி.
பூமி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு என்ற நல்ல விஷயத்திற்காக இந்தப் பாடலைப் பொறுத்துக் கொள்ளலாம். அதேசமயம், பாடல் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான பிட் வார்த்தைகளைப் போட்டு மண்டையை உடைத்திருக்கிறார் பார்த்திபன்.
முழுப் பாடலும் இதோ…
உன் சோனுல சேட்டையப்போடு…ஊர் சோனுல ஆட்டையப்போடு…ஓசோனுல ஓட்டையப் போடாதே…!
சாவி போட்டு பூட்டைக் கிளப்பு…சவுண்ட் போட்டு பாட்டைக் கிளப்பு…ஆட்டம் போட்டு சூட்டைக் கிளப்பாதே…!
சூடால சுருங்குது பூமி…சூடாக்க ஹாட்டங்கள் வேணாம்…பனியுருகி லோகமே அழியும்விழிப்புணர்வு ஏற்பட வேணும்…
பார்த்தாலே பத்திக்கும்…தொட்டாலே தொத்திக்கும்…தின்னாத்தான் தித்திக்கும்…ஜொள்ளாதடா…!
பத்திக்கும் காட்டையும்…எத்திக்கும் காற்றையும்…தொத்திக்கும் ஆபத்தை…தடுப்பாயடா…!
அட…மாசு…மாசில்லா…காத்துன்னு காது குத்தாதே…இந்தகாதல் இல்லாம மூச்சு முட்டி சாகாதே…!
இயற்கை எய்தும் முன்இயற்கையை லவ் பண்ணுங்க!பூமி லேக்கா..சாமி லேதுடா…!டென்ஷன்கள் ஆயிரம்…ட்ரீட்மெண்ட்டே போதைதான்…சொலுஷன் பூமியில்பிமேலடாபிமேலும் மேலில்லை…மேல் ஒன்றும் கீழில்லை…எதிர்பாலின் ஈர்ப்புதான்மெய் ஞானமே…!
ஏய்… ஆசை தோசைங்க…சூடா சுட்டுத் தின்னுங்க&இன்படேஸ்ட்டே வேணான்னா…டோட்டல் லைப்பே வேஸ்ட்டுங்க…!பைக்க ஓட்டுங்க…ஹெல்மெட் மாட்டிக் கொள்ளுங்க…சாம..பேத..தான..தண்டன்டா…!
சுசித்ரா, பிலிப் சயனோரா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலுக்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். ரூ. 50 லட்சம் செலவில், 5 நாட்கள் இரவில், பிரமாண்ட விளக்கொளியில், படமாக்கினராம்.
இந்த வெளிச்சத்தைத் தவிர்த்திருந்தால் கொஞ்சம் பூமிக்கு இதமாக இருந்திருக்கும்.

No comments: