Wednesday, September 30, 2009

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் 2007 & 2008

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிவா‌ஜி படத்தில் நடித்ததற்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு ர‌ஜினியும், தசாவதாரம் படத்துக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு கமலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உளியின் ஓசை படத்துக்காக சிறந்த வசனர்த்தாவாக முதல்வர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற விருது விவரங்கள் வருமாறு.

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

சிறந்த படம் முதல் ப‌ரிசு - தசாவதாரம்சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - அபியும் நானும்சிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - மெய்ப்பொருள்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் - பூஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், முதல் ப‌ரிசு - வல்லமை தாராயோஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், இரண்டாம் ப‌ரிசு - வண்ணத்துப்பூச்சிசிறந்த நடிகர் - கமல்ஹாசன்சிறந்த நடிகை - சினேகா (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - த்‌ரிஷா (அபியும் நானும்)சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ்ரா‌ஜ் (பல படங்கள்)சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)சிறந்த இயக்குனர் - ராதாமோகன் (அபியும் நானும்)சிறந்த கதாசி‌ரியர் - தமிழ்ச்செல்வன் (பூ)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)சிறந்த பாடலாசி‌ரியர் - வாலி (தசாவதாரம்)சிறந்த பின்னணி பாடகர் - பெ‌ள்ளிரா‌ஜ் (சுப்பிரமணியபுரம்)சிறந்த பின்னணி பாடகி - மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)சிறந்த எடிட்டர் - ப்ரவீன் - ஸ்ரீகாந்த் (சரோஜா)சிறந்த கலை இயக்குனர் - ரா‌‌ஜீவன் (வாரணம் ஆயிரம்)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)சிறந்த நடன ஆசி‌ரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)சிறந்த ஒப்பனை கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)சிறந்த பின்னணி குரல் - ஆண் - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)சிறந்த பின்னணி குரல் - பெண் - சவீதா (பல படங்கள்)

2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :

சிறந்த படம் முதல் ப‌ரிசு - சிவா‌ஜிசிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - மொழிசிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - பள்ளிக்கூடம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - பெ‌ரியார்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் சிறப்புப் ப‌ரிசு - மிருகம்அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம் - தூவானம்சிறந்த நடிகர் - ர‌ஜினிகாந்த்சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சத்யரா‌ஜ் (பெ‌ரியார்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - பத்மப்‌ரியா (மிருகம்)சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவா‌ஜி)சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக்சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த இயக்குனர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதாசி‌ரியர் - எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - பாலா‌ஜி சக்திவேல் (கல்லூரி)சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)சிறந்த பாடலாசி‌ரியர் - வைரமுத்து (பெ‌ரியார் மற்றும் பல படங்கள்)சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவா‌ஜி)சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)சிறந்த எடிட்டர் - சதீஷ்குரோசோவா (சத்தம் போடாதே)சிறந்த கலை இயக்குனர் - தோட்டாதரணி (சிவா‌ஜி)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)சிறந்த நடன ஆசி‌ரியர் - பிருந்தா (தீபாவளி)சிறந்த ஒப்பனை கலைஞர் - ராஜேந்திரன் (பெ‌‌ரியார்)சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன் (பில்லா)சிறந்த பின்னணி குரல் - ஆண் - கே.பி.சேகர் (மல‌ரினும் மெல்லிய)சிறந்த பின்னணி குரல் - பெண் - மகாலட்சுமி (மிருகம்)

மூப்பெரும் இசை மேதைகள் ஒன்றாக கச்சேரி!


எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். இவர்களின் இசைக் கச்சோ‌ரியை தனித்தனியே கேட்பதே பேரானந்தம். மூவரும் இணைந்து இசைக் கச்சே‌ரி நடத்தினால்? கற்பனை இல்லை மகா ஜனங்களே, நடக்கப் போகும் நிஜம்.
அக்டோபர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பெப்சி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டர் மற்றும் நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மாநா‌‌ட்டை மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். அன்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல், ர‌ஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். மறுநாள் அதாவது 10 ஆம் தேதி மாலை நேரு உள்விளையாட்டரங்கில் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது.

Sunday, September 27, 2009

விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நான்கு பேருமே பாடி நடிக்கின்றனர்.


ஒரே மேடையில் கூட இவர்களை அசெம்பிள் செய்வது கஷ்டம். ஆனால், இந்த நான்கு பேரும் இசை ஆல்பம் ஒன்றில் இணைந்து பாடப் போகிறார்கள்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஸ்பெஷல், முன்னாள் லயோலா கல்லூ‌ரி மாணவர்கள் மட்டுமே இதில் முழுக்க முழுக்க பங்கு கொள்ள இருக்கிறார்கள். மேலே உள்ள விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நான்கு பேருமே லயோலா கல்லூ‌ரியின் முன்னாள் மாணவர்கள்.
தனது இசை ஆல்பத்தில் பாடுவதுடன் நடிக்கவும் வேண்டும் என்று இவர்களை தனித்தனியே கேட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. நால்வரும் உற்சாகமாக ஓகே சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல் வார்த்தையை காப்பாற்றினால் சரி.

Saturday, September 26, 2009

பார்த்திபனின் புதிய 'வித்தகன்'


புதுமைப் பித்தன் பார்த்திபன் பாடலாசிரியாராகியுள்ளார். தனது இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் வித்தகன் படத்தில் உலக வெப்பமயமாதல் குறித்த பாடல் ஒன்றைப் புணைந்துள்ளாராம்.
பார்த்திபன் நீண்ட நாளுக்குப் பிறகு நடிப்பு பிளஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வித்தகன். அவரது ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். இப்படத்தில் வித்தியாசமான பார்த்தியைப் பார்க்கலாமாம்.
படத்தை செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து வருகிறார், இப்படத்தில் பார்த்திபன் ஒரு பாடலை எழுதியுள்ளார். உலக வெப்பமயமாதல் குறித்த பாடலாம் இது.
உன் சோனுல சேட்டையப் போடுஊர் சோனுல ஆட்டையப் போடுஓசோனுல ஓட்டையப் போடாதே என்று அமர்க்களமாக தொடங்குகிறது இந்தப் பாடல்.
இந்தப் பாடலை பார்க்கும்போதும், படிக்கும்போதும் தமிழ் ப் பாடல்தானா என்ற சந்தேகம் லேசாக வரும். காரணம், தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு என பல பாஷைகளைப் பிழிந்து போட்டு வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறார் பார்த்தி.
பூமி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு என்ற நல்ல விஷயத்திற்காக இந்தப் பாடலைப் பொறுத்துக் கொள்ளலாம். அதேசமயம், பாடல் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான பிட் வார்த்தைகளைப் போட்டு மண்டையை உடைத்திருக்கிறார் பார்த்திபன்.
முழுப் பாடலும் இதோ…
உன் சோனுல சேட்டையப்போடு…ஊர் சோனுல ஆட்டையப்போடு…ஓசோனுல ஓட்டையப் போடாதே…!
சாவி போட்டு பூட்டைக் கிளப்பு…சவுண்ட் போட்டு பாட்டைக் கிளப்பு…ஆட்டம் போட்டு சூட்டைக் கிளப்பாதே…!
சூடால சுருங்குது பூமி…சூடாக்க ஹாட்டங்கள் வேணாம்…பனியுருகி லோகமே அழியும்விழிப்புணர்வு ஏற்பட வேணும்…
பார்த்தாலே பத்திக்கும்…தொட்டாலே தொத்திக்கும்…தின்னாத்தான் தித்திக்கும்…ஜொள்ளாதடா…!
பத்திக்கும் காட்டையும்…எத்திக்கும் காற்றையும்…தொத்திக்கும் ஆபத்தை…தடுப்பாயடா…!
அட…மாசு…மாசில்லா…காத்துன்னு காது குத்தாதே…இந்தகாதல் இல்லாம மூச்சு முட்டி சாகாதே…!
இயற்கை எய்தும் முன்இயற்கையை லவ் பண்ணுங்க!பூமி லேக்கா..சாமி லேதுடா…!டென்ஷன்கள் ஆயிரம்…ட்ரீட்மெண்ட்டே போதைதான்…சொலுஷன் பூமியில்பிமேலடாபிமேலும் மேலில்லை…மேல் ஒன்றும் கீழில்லை…எதிர்பாலின் ஈர்ப்புதான்மெய் ஞானமே…!
ஏய்… ஆசை தோசைங்க…சூடா சுட்டுத் தின்னுங்க&இன்படேஸ்ட்டே வேணான்னா…டோட்டல் லைப்பே வேஸ்ட்டுங்க…!பைக்க ஓட்டுங்க…ஹெல்மெட் மாட்டிக் கொள்ளுங்க…சாம..பேத..தான..தண்டன்டா…!
சுசித்ரா, பிலிப் சயனோரா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலுக்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். ரூ. 50 லட்சம் செலவில், 5 நாட்கள் இரவில், பிரமாண்ட விளக்கொளியில், படமாக்கினராம்.
இந்த வெளிச்சத்தைத் தவிர்த்திருந்தால் கொஞ்சம் பூமிக்கு இதமாக இருந்திருக்கும்.


சினேகாவைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சிக்கு வந்த நடிகை சினேகாவை பார்க்க தனது மனைவி விரும்பியதால், சாலையோரம் வண்டியை நிறுத்தி சினேகாவைப் பார்க்கப் போய், சினேகா கலந்து கொண்ட நகைக் கடை பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர்.
திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடையின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சினோகாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா.
இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர்.
அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில்,
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக.
நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி யில் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய்க்கு சின்னத்திரை !


பெ‌ரிய திரையில் வெற்றிகரமாக வேட்டையாடிக் கொண்டிருக்கும் விஜய்க்கு சின்னத்திரை மீது ஆசையா? யாருக்கும் ஆச்ச‌ரியமாக‌த்தான் இருக்கும். ஆனால், ஆசை அடிமனதில் கனன்று கொண்டிருக்கிறதே.

பி‌ரிண்ட் மீடியாவும், தொலைக்காட்சியும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்றாகிவிட்டது. அதனால்தான் அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு சேனலையும், தினச‌ரி பத்தி‌ரிகையையும் தங்கள்வசம் வைத்துள்ளன.

சன் பிக்சர்ஸ் படங்களை வாங்கி விநியோகிக்க தொடங்கிய பிறகு, அரசியல் கட்சிகளுக்கு அத்தியாவசியமாக இருந்த தினச‌ரியும், தொலைக்காட்சியும் சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் தேவையானதாகிவிட்டது.

சும்மாவா…? தீ, படிக்காதவன், திண்டுக்கல் சாரதி, மாசிலாமணி போன்ற பிலோ ஆவரே‌ஜ் படங்கள்கூட பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குகின்றன. இதற்கு ஒரே காரணம், சன் குழுமத்தின் திகட்டும் விளம்பரங்கள். விஜய்யே தனது படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸை நம்பியிருக்கிறார் என்பதுதான் இன்றைய நிலைமை.

விரைவில் அரசியலில் நுழையும் எண்ணம் இருப்பதால் தனக்கென்று தனி சானல் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் நினைக்கிறாராம். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பெய‌ரில் சேனல் துவங்க அனுமதி வாங்கும் வேலைகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. சேனல் தொடங்கினால் அரசியல் பிரச்சாரமும் செய்யலாம், படத்தையும் புரமோட் பண்ணலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

விஜய்யின் சின்னத்திரை ஆசை என்றதும், அவர் சீ‌ரியலில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக யாரேனும் முந்தி‌ரிக் கொட்டைத்தனமாக கற்பனை செய்திருந்தால், நாம் அதற்கு பொறுப்பல்ல

Wednesday, September 2, 2009

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்


சன் பிக்சர்ஸே எதிர்பாராத விறுவிறுப்பு மற்றும் தரத்துடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.
கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் பகுதியில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஷெட்யூலில் வித்தியாசமான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பர்வீன் ட்ராவல்ஸிலிருந்து ஒரு சொகுசு பஸ்ஸை வாடகைக்கு எடுத்து, அதை ஒரு செயற்கை கம்ப்யூட்டர் ஆராய்ச்சி லேப் ஆகவே மாற்றியிருக்கிறார்கள்.
இந்த லேபுக்குள் உள்ள ரஜினியை 20 பேர் தாக்குவது போன்ற காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். எந்திரன் ஷூட்டிங் என்றதும் வழக்கம்போலவே அந்தப் பகுதி முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டதாம்.
கிராமப்புற மக்கள் என்றில்லாமல், சிறுசேரி சிப்காட் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்களும் கிடைக்கிற கேப்பில் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்க்க குழுமிவிட்டார்களாம்.
எந்திரன் யூனிட்டைச் சேர்ந்த முக்கிய டெக்னீஷியன் ஒருவர் கூறுகையில், “படத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டம் மட்டுமல்ல… லாஜிக் மீறல் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது ஷங்கரின் கட்டாய உத்தரவு. காரணம் ரஜினி சார் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருப்பதுதான்.
ஒவ்வொரு காட்சியும் சர்வதேசத் தரத்தில், எந்த நாட்டு திரைத் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் வியக்கும் அளவுக்கு இருக்கும்..”, என்றார்.
2010- எந்திரன் ஆண்டு எனும் அளவு பிரமாண்ட வெளியீடாக இந்தப் படத்தைக் கொண்டு வர திட்டமிடுகிறது சன் பிக்சர்ஸ்!

ராதாவின் மகள் நாயகியாகின்றார்







அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ்த் திரையுலகில் ரஜினி - கமல் என முதல்நிலை நாயகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்து பல ஆண்டுகள் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்தவர் ராதா.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்ந்தார். என்பதுகளில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார்.
இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு, குடும்பப் பெண்ணாக மாறிய ராதா, தன் மூத்த மகளுக்கு கார்த்திகா எனப் பெயர் சூட்டி, நடனத்தில் சிறந்தவராக மாற்றினார். சமீபத்தில் அவரது நடனம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றது. மகளுடன் சேர்ந்து ராதாவும் நடனமாடினார்.
அடுத்து இப்போது மகளையும் நாயகியாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ராதா. நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஜோடியாக ஜோஷ் எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா.



இந்தப் படத்தின் படப்பிடிப்பு கூட கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. இதில் ராதா, அம்பிகா மற்றும் கார்த்திகா பங்கேற்றனர்.
தன் மகள் அறிமுகமாவது குறித்து நடிகை ராதா கூறியதாவது:
“என் மகளை தமிழில் அறிமுகப்படுத்த நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டார்கள். உடனே ஒப்புக் கொண்டேன். நாக சைதன்யாவின் தாத்தா மற்றும் அப்பாவுடன் நான் நடித்துள்ளேன். இப்போது என் மகள் அந்தக் குடும்பத்தின் வாரிசுடன் நடித்துள்ளது பெருமையாக உள்ளது. தமிழிலும் விரைவில் நடிப்பாள் கார்த்திகா,” என்றார் ராதா.
படங்களில் நடிப்பது, நடனம் இரண்டுமே தனக்கு விருப்பமான விஷயங்கள் என தெரிவித்தார் கார்த்திகா