Sunday, April 22, 2007

காற்றில் ஓடும் கார் ‘மினிகேட்’



காற்றில் இயங்கும் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக, பிரான்சை சேர்ந்த மோடியூர் டெவலப்மென்ட் நிறுவனத்துடன் (எம்டிஐ) டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. மினிகேட் என இந்த காருக்கு பெயரிடப்பட்டு உள்ளது.எம்டிஐ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இந்த காரின் எடை குறைவாக இருக்கும். இதன் பாகங்கள் பைபரால் தயாரிக்கப்படும். அதிகபட்சமாக 220 கி.மீ. வேகம் வரை எட்டிப்பிடிக்கும். எனினும் நகரத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கும் காரில் அதிகபட்ச வேகம் 50 கி.மீ. அதற்கு மேல் வேகம் சென்றால், காற்றுக்கு பதிலாக பெட்ரோல் போன்ற பிற எரிபொருளில் இயங்க ஆரம்பிக்கும். இருவித எரிபொருள்களில் இயங்கும் அளவுக்கு என்ஜின் வடிவமைக்கப் பட்டு உள்ளதால் இது சாத்தியம். மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம், இந்த காருக்கு சாவி கிடையாது. ஒரு அட்டை தரப்படும். அதை செருகினால் வண்டி சீறிப் பாயும். காரில் சிறிய கம்ப்யூட்டர் திரை இருக்கும். மேலும் இத்துடன் வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு பெறலாம்.இந்த கார் விற்பனைக்கு வந்துவிட்டால், ஆங்காங்கே காற்று நிரப்பிக் கொள்ள பங்க்குகள் திறக்கப்படும். அங்கே சென்று அடித்துக் கொள்ளலாம். 45 ரூபாய்க்கு காற்று அடித்தால் 100 கி.மீ. தூரம் செல்ல முடியும். அதாவது கிலோமீட்டருக்கு 45 பைசாதான் செலவு. ஒரு முறை முழுவதுமாக காற்றி நிரப்பினால் 200 கி.மீ. தூரம் செல்லலாம். குமரி மாவட்டம், குளச்சல் கடலில் உயர்ரக மீனாகிய ‘கேரை’ மீன்கள் தற்போது அதிக அளவில் கிடைக்கிறது. இதை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.நன்றி தினகரன்

No comments: