பட்டு ஜவுளி விற்பனையில் முன்னணியில் விளங்கும் ஆர்எம்கேவி நிறுவனம் 50 ஆயிரம் நிறங்களைக் கொண்ட பட்டுப் புடவையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் நிறுவன உரிமையாளர் கே. விஸ்வநாதன் கூறியது: பட்டு ஜவுளி விற்பனையில் 80 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விற்பனையகத்தைத் தொடங் கியது. கடந்த ஆண்டு 240 மீட்டர் நீளமுள்ள பட்டுப் புடவையைத் தயாரித்து புதிய கின்னஸ் சாதனையை இந்நிறுவனம் நிகழ்த்தியது. அதற்கான சான்றி தழையும் கின்னஸ் நிறுவனம் அளித்துள்ளது. தற்போது 50 ஆயிரம் நிறங்கள் உடைய பட்டுப்புடவையை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்எம்கேவி டிசைன் ஸ்டுடியோவில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புடவையை 45 நாள்களில் 2 நெசவாளர்கள் இரவு பகலாக உழைத்துத் தயாரித்துள்ளனர்.
No comments:
Post a Comment