Sunday, April 29, 2007
Saturday, April 28, 2007
Tuesday, April 24, 2007
தெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி
'
தமிழீழம் வல்வை ஆலடியை பிறப்பிடமாகவும், முருகையன் கோவில் வீதியை(தூபிவாசல்) வதிவிடமாகவும், தற்போது கனடா Torontoவில் வசித்துவந்தவருமாகிய ஆலடி ரவி என்று அழைக்கப்படும் - தெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி 24.04.2007 செவ்வாய்க்கிழமை அதிகாலை Torontoவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் பிரேமாவதியின் அன்பு கணவரும், காலம்சென்ற Tug Master தேவசிகாமணி - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற சுப்பிரமணி்யம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோலி, மயூரன், மதன் ஆகியோரின் அன்பு தந்தையும், ஓசானாவின் அன்பு மாமாவும், செல்லமணி (தமிழீழம்), சந்திரமணி (சுதா-தமிழீழம்), புவனசிகாமணி (பாபு- கிறீக் கப்பல்), அன்புமணி(ஜெயந்தி- கனடா), ஆகியோரின் அன்பு சகோதரரும், சிவானந்தம் (லண்டன்), ஜெயராஜ் (தமிழீழம்), லட்சுமணப்பெருமாள் (திருச்சி), ரவீந்திரன் (ரவி கனடா), வசந்தி(திருச்சி), சாந்திராவதி(திருச்சி),ரூபவதி(கனடா), இந்திராவதி (தமிழீழம்), ஜமுனனாவதி (கனடா), ஜெயவதி (சுவிஸ்), காலம் சென்ற பாலச்சந்திரன், பூரணச்சந்திரன் (தமிழீழம்) , செல்வச்சந்திரன் ( அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரின் பூதவுடல் இன்று (25.04.2007) மாலை 6மணி முதல் 9மணிவரை இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக 2035 Weston Road ல் அமைந்துள்ள Ward Funeral Home ல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (26.04.2007) காலை 9மணிமுதல் 11மணிவரை ஈமைகிரிகைகள் நடைபெற்று Riverside Cemetery, (1567– Royal York Road, Toronto) யில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு :
மனோலி - கனடா 1 416 630 6621
ரவி ஜெயந்தி - கனடா 1 416 425 3475
கண்ணன் (மருமகன்) - லண்டன் 44 208 574 7266
செல்வமணி ஜெயராஜ் - இலங்கை 94 786 230914
மேனகி (மருமகள்) -திருச்சி 91 4312 480 664
Sunday, April 22, 2007
50 ஆயிரம் நிறங்கள் கொண்ட பட்டுப்புடவை
பட்டு ஜவுளி விற்பனையில் முன்னணியில் விளங்கும் ஆர்எம்கேவி நிறுவனம் 50 ஆயிரம் நிறங்களைக் கொண்ட பட்டுப் புடவையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் நிறுவன உரிமையாளர் கே. விஸ்வநாதன் கூறியது: பட்டு ஜவுளி விற்பனையில் 80 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விற்பனையகத்தைத் தொடங் கியது. கடந்த ஆண்டு 240 மீட்டர் நீளமுள்ள பட்டுப் புடவையைத் தயாரித்து புதிய கின்னஸ் சாதனையை இந்நிறுவனம் நிகழ்த்தியது. அதற்கான சான்றி தழையும் கின்னஸ் நிறுவனம் அளித்துள்ளது. தற்போது 50 ஆயிரம் நிறங்கள் உடைய பட்டுப்புடவையை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்எம்கேவி டிசைன் ஸ்டுடியோவில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புடவையை 45 நாள்களில் 2 நெசவாளர்கள் இரவு பகலாக உழைத்துத் தயாரித்துள்ளனர்.
காற்றில் ஓடும் கார் ‘மினிகேட்’
காற்றில் இயங்கும் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக, பிரான்சை சேர்ந்த மோடியூர் டெவலப்மென்ட் நிறுவனத்துடன் (எம்டிஐ) டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. மினிகேட் என இந்த காருக்கு பெயரிடப்பட்டு உள்ளது.எம்டிஐ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. இந்த காரின் எடை குறைவாக இருக்கும். இதன் பாகங்கள் பைபரால் தயாரிக்கப்படும். அதிகபட்சமாக 220 கி.மீ. வேகம் வரை எட்டிப்பிடிக்கும். எனினும் நகரத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கும் காரில் அதிகபட்ச வேகம் 50 கி.மீ. அதற்கு மேல் வேகம் சென்றால், காற்றுக்கு பதிலாக பெட்ரோல் போன்ற பிற எரிபொருளில் இயங்க ஆரம்பிக்கும். இருவித எரிபொருள்களில் இயங்கும் அளவுக்கு என்ஜின் வடிவமைக்கப் பட்டு உள்ளதால் இது சாத்தியம். மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம், இந்த காருக்கு சாவி கிடையாது. ஒரு அட்டை தரப்படும். அதை செருகினால் வண்டி சீறிப் பாயும். காரில் சிறிய கம்ப்யூட்டர் திரை இருக்கும். மேலும் இத்துடன் வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு பெறலாம்.இந்த கார் விற்பனைக்கு வந்துவிட்டால், ஆங்காங்கே காற்று நிரப்பிக் கொள்ள பங்க்குகள் திறக்கப்படும். அங்கே சென்று அடித்துக் கொள்ளலாம். 45 ரூபாய்க்கு காற்று அடித்தால் 100 கி.மீ. தூரம் செல்ல முடியும். அதாவது கிலோமீட்டருக்கு 45 பைசாதான் செலவு. ஒரு முறை முழுவதுமாக காற்றி நிரப்பினால் 200 கி.மீ. தூரம் செல்லலாம். குமரி மாவட்டம், குளச்சல் கடலில் உயர்ரக மீனாகிய ‘கேரை’ மீன்கள் தற்போது அதிக அளவில் கிடைக்கிறது. இதை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.நன்றி தினகரன்
பாம்பும் நிலநடுக்கமும்
பாம்பும் நிலநடுக்கமும்
சீனா சாதனைமனிதனுடைய ஆறறிவு சாதிக்க முடியாததை ஐந்தறிவு சாதிக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைக் முன்கூட்டியே கண்டறிந்து சொல்லும் திறமை பாம்புகளுக்கு இருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.நிலநடுக்கம் நிகழப் போகிறது என்பதை பாம்புகள் நிலநடுக்கம் நிகழப் போகும் இடத்திற்கு நூற்று இருபது கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்கும் என்றும், அதுவும் நிலநடுக்கம் நிகழப் போவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அறிந்து கொள்ளும் என்றும் சொல்லி வியக்க வைக்கிறார்கள் சீனாவின் நானிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள நிலநடுக்க ஆராய்ச்சிக் குழுவினர்.பாம்புகள் உலகிலுள்ள உயிரினங்களிலேயே அதிக உணர்வு கொண்ட உயிரினம். நிலநடுக்கம் நிகழப் போவதை அறிந்தால் இவற்றின் செயல்பாடுகள் பெருமளவுக்கு மாறிவிடுகின்றன. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தால் எப்படியேனும் வெளியேற வேண்டுமென்று வன்முறையாய் போராடுகின்றன. தங்கள் இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயல்கின்றன என்கிறார் இந்தக் குழுவின் இயக்குனராக உள்ள ஜியாங் வெய்ஷங். பாம்பு வளைகளில் காமராக்கள் பொருத்தி பாம்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து நிலநடுக்கத்தை அறிந்து கொள்வதில் சீன விஞ்ஞானிகள் வல்லவர்களாகி வருகிறார்கள்.சீனாவில் நிலநடுக்கம் நிகழ அதிக வாய்ப்புள்ள பதிமூன்று நகரங்களில் ஒன்று நானிங். இங்கே நூற்று நாற்பத்து மூன்று நிலநடுக்க கண்காணிப்புப் பிரிவுகள் உள்ளன. கண்டு பிடித்துச் சொல்வது மனிதனோ, அவனுடைய கண்டு பிடிப்புகளோ அல்ல. விலங்குகள் ! சீனா நிலநடுக்கம் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்று. 1976ல் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் மாண்டு போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபிறவி எடுத்த உலக வர்த்தக மையம்
பைசா கோபுரம்
இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரம்.
1173-- ஆம் வருடம் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வடிவமைத்தவர் யார் என்று சரியாகக் கூறமுடியாது. காரணம் இதன் கட்டுமானப் பணிகள் இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்ததுதான். எனினும் முதலில் கட்டுமானப் பணியைத் தொடங்கியவர் & பொனானோ பிஸானோ.
நேராகக் கட்டப் பட்டுக் கொண்டிருந்த இந்தக் கட்டடம் கட்டும் போதே சாய்ந்த நிலக்குப் போனது
ஏழாவது மாடியில் இருந்து அளந்ததில் கிட்டத்தட்ட 4.4 மீட்டர் தூரத்திற்கு சாய்ந்திருக்கும் இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையால்தான் (60 சதவிகிதம் நீர் சேர்ந்த இந்தப் பகுதி மண்) சாயத் தொடங்கியது.
இந்த கோபுரத்தின் எடை 14,500 டன்கள்.
சுமார் ஐந்தரை டிகிரி கோணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே நோக்கி சாய்ந்திருக்கிறது இந்தக் கோபுரம்.
கோபுரத்திற்குள் இருக்கும் சுழல் படிக்கட்டுகளின் மூலம் கோபுரத்தின் உச்சி வரை செல்ல அனுமதி உண்டு.
1173 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி மூன்றாவது மாடி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 1178 ஆம் வருடம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி 1272 ஆம் வருடம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஏழாவது மாடி கட்ட ஆரம்பித்த போது 1278 ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.
மறுபடி 1360 ஆம் வருடம் தொடங்கப்பட்டது கட்டுமானப் பணிகள் தொடர்ந்து பத்து வருடங்கள் தடையின்றி நடக்க பைசா கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
கோபுர உச்சிக்குச் செல்ல அமைக்கப் பட்டிருக்கும் படிகள் 293
கோபுரத்தின் உயரம் 58.36 மீட்டர்கள்.
ஒவ்வொரு வருடமும் சாய்ந்து கொண்டே இருக்கும் இந்த கோபுரத்தை அவ்வப்போது நிமிர்த்த யாராவது முயற்சி செய்வண்டு. ஒருமுற 800 டன் எடை கொண்ட கற்கள் கோபுரத்தின் ஒரு பக்கம் நிறுத்தி, அதிலிருந்து கயிறு கட்டி கோபுரத்த நிமிர்த்தப் பார்த்தனர்.
இரண்டு வெவ்வேறு எடையுடைய பந்துகள் காற்றோ மற்ற குறுக்கீடுகளோ இல்ல என்றால் ஒரே நேரத்தில்தான் பூமியில் விழும் என்று கலிலியோ மக்களுக்கு எடுத்துச் சொன்ன பைசா கோபுரத்தின் உச்சியில் இருந்தான்.

Thursday, April 19, 2007
ஜோக்குகள்
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...

Wednesday, April 18, 2007
கடிதம் மூலம் ஒருவரை உங்கள் வசமாக்கல்லாம்
Monday, April 16, 2007
Subscribe to:
Comments (Atom)