எண்பதுகளில் தமிழகத்தின் கனவுக்கன்னியாக கலக்கியவர் ஸ்ரீதேவி. உளியில் உயிர்பெற்ற சிலைபோன்ற உடலமைப்பு, இளசுகளின் இதயத்திற்கு வலைவீசும் கண்களென தேவதைக்கு உதாரணம் காட்டும் அழகில் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார்.
தமிழிலிருந்து இந்திக்கு போனார், அங்கும் தனது கவர்ந்திழுப்பு நடிப்பால் ரசிகர்களின் மனசில் இடம்பிடித்தார். போனி கபூருடன் திருமணம் நடந்த பிறகு ஸ்ரீதேவியின் திரை தரிசனம் நின்றுபோனது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ஸ்ரீதேவி. 'மாப்பிள்ளை' படத்தின் ரீ-மேக்கில் தனுஷின் மாமி்யாராக நடிக்கவுள்ளார். இதுபற்றி இயக்குனர் சுராஜிடம் கேட்டபோது:-
"ரஜினி நடித்த 'படிக்காதவன்' பட டைட்டிலில் தனுஷை இயக்கினேன். அப்போது பேட்டி அளித் தனுஷ், 'ரஜினி டைட்டிலில் இனி ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன். அதன்பிறகு நடிக்க மாட்டேன்' என்றார். அந்த ஒரு படம்தான் 'மாப்பிள்ளை'. ஹீரோயினாக ஹன்ஸிகா மோத்வானி அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகை.
மாமியார் ஸ்ரீவித்யா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க கேட்டிருக்கிறேன். அவரிடம் கதை சொன்னேன். பிடித்திருப்பதாக கூறினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். மாமியார்-மருமகனுக்கு இடையே நடக்கும் மோதல்தான் கதை.
80 இறுதிவாக்கில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது வந்த 'சாந்தினி' என்னும் ஹிந்திப் படத்தில் ஸ்ரீதேவி ஆடிய ஒரு பாடல் காச்சியை அப்போது திரும்பதிரும்ப பார்த்ததுதான் ஞாபகம் வருகின்றது.
அப்படி என்ன பாடல் காட்சி என்று நீங்களும் தான் பாருங்களேன்...
No comments:
Post a Comment