Sunday, August 23, 2009

கமலின் 50 ஆண்டு திரைவாழ்க்கை!


கடந்த 12 ஆம் தேதி கமல் திரைத்துறைக்கு வந்து ஐம்பதாண்டுகள் நிறைவு பெற்றது. விழா இல்லை, வாழ்த்து போஸ்டர்களில்லை, பூமாலைகளில்லை... சுருக்கமாகச் சொன்னால், எதுவுமில்லை.

ஆடிக் காற்றிலும் கோழித் தூக்கம்போடும் கோடம்பாக்கம் இதிலும் குறைட்டை விடுகிறதோ என்று பலருக்கும் சந்தேகம். ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

கமலின் பொன் விழாவையொட்டி விஜய் டிவி ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்துகிறது. முதலில் கமல் பேருந்து தமிழகம், பாண்டி‌ச்சே‌ரி மற்றும் பெங்களூருவை வலம் வரும். இந்த பேருந்தில் கமலின் அ‌ரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

அடுத்து இலக்கியவாதிகள் பங்குபெறும் கருத்தரங்கு மதுரையில் நடைபெறும். கருத்தரங்கின் தலைப்பு, கமலும் தமிழும். திரைப்படங்களில் கமல் கையாண்ட வெ‌வ்வேறு வட்டார வழக்குகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

கோயம்புத்தூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கமல் படங்களின் ஹிட்ஸ் மட்டும் இடம்பெறும். சென்னையில் கமல் திரைப்பட விழாவை மூன்று வாரங்கள் சத்யம் சினிமாசுடன் இணைந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளது, விஜய் டிவி.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சகட்டமாக பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிமுக விழாவில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கமலின் அலுவலகம் அமைந்துள்ள எல்டாம்ஸ் சாலையின் பெயரை டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாற்ற முதல்வ‌ரிடம் நடிகர் சங்கம் சார்பில் கோ‌ரிக்கை வைக்கப்படும் என தெ‌ரிவித்தார்.

No comments: