திரும்ப திரும்ப தோற்றாலும், விரும்பி விரும்பி தன்னை பேச வைக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். அகில இந்திய இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தபின் அவரது கதைகளில் மண்ணும் இல்லை. மணமும் இல்லை! இந்த எண்ணத்தை அடித்து நொறுக்குகிற மாதிரி ஒரு படம் எடுக்கப் போகிறாராம் அவர்.
பலரும் முயன்று தோற்ற முயற்சிதான் இதுவும். அதாவது கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கப் போகிறாராம் மணி. இது தொடர்பாக இலக்கிய மேதை ஜெயமோகனுடன் டிஸ்கஷன் நடத்திக் கொண்டிருக்கிறார். சரித்திர படங்களை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சாதாரண பட்ஜெட்டில் எடுத்துவிட முடியாதல்லவா? இந்த படத்திற்கான பட்ஜெட் 600 கோடியை தொடும் என்கிறார்கள்.
இவ்வளவு பெரும் தொகையை இறக்கக் கூடிய சக்தி கொண்ட ஒரே நிறுவனம் சன் பிக்சர்ஸ்தான் என்பதால் அவர்களுடன் கூட்டு சேரப்போகிறாராம் மணிரத்னம். இவரது இன்னொரு பெருமைக்குரிய கூட்டு இசைஞானி இளையராஜா! பல காலமாக பிரிந்திருந்த இவ்விருவரையும் இணைத்து வைக்கப் போகிறார் அமரர் கல்கி!
No comments:
Post a Comment