Wednesday, November 14, 2007

அஜித்தின் பில்லா

"சத்தமா பேசாதே! சுத்தமா பிடிக்காது!" - இது தான் பில்லாவின் பஞ்ச் டயலாக். அஜித் ரசிகர்களின் கனவுகளில் இப்போதே பில்லா மிரட்ட ஆரம்பித்து விட்டார். மார்ச் 2007ல் பூஜை போடப்பட்ட 'பில்லா 2007' இப்போ வருமோ, அப்போ வருமோ என்று அஜித்தின் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு வெளியீட்டுத் தேதி தள்ளிப் போடப்பட்டே வந்தது. ஒரு கட்டத்தில் 'பில்லா 2008' என்று பெயர் மாற்றம் செய்யவேண்டி வருமோ என்று எல்லாரும் அஞ்சவேண்டிய நிலையும் இருந்தது. கடைசியாக எல்லாரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரிஜினல் பில்லா சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெள்ளித்திரைக்கு வருகிறார் 'பில்லா 2007'. சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் பரிசாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் இத்திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.படத்தின் ஸ்பெஷல் அஜித் என்றாலும், ரசிகர்களை கவரக்கூடிய மற்ற நட்சத்திரங்களும் உண்டு. பிரபு, ரஹ்மான், நயன்தாரா, நமீதா என்று நட்சத்திரப் பட்டாளம் பில்லாவுக்கு துணையாக களமிறங்கப் போகிறார்கள்.1981ல் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் பில்லாவே சூப்பர் படம். 2007ல் பன்மடங்கு தொழில்நுட்பம் வளந்திருப்பதால் கலக்கலாக மிரட்டப்போகிறோம் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். படத்தின் திரைக்கதையில் நிறைய திருத்தங்கள் செய்து திடுக்கிடவைக்கும் காட்சிகளையும் சேர்த்திருக்கிறாராம்.
















No comments: