Saturday, October 23, 2010

அழகென்னும் ஓவியம்

Kim Kaardashian என்னும் இவர் அம்மணியின் மேலும் படங்களைக் காண அம்மணிமேல் கிளிக் பண்ணுங்கள்!

Sunday, October 17, 2010

ஷாரூக்கான் அதிர்ச்சி

ரஜினியின் எந்திரன் / ரோபோவில் வரும் காட்சியைப் போலவே ஷாரூக்கானின் படத்திலும் ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாம். ஆனால் தனது படத்தில் வருவது போன்ற காட்சி ரோபோவில் வந்து விட்டதால் இப்போது அந்தக் காட்சியை மாற்றத் திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்.

பெரும் பொருட் செலவில் ரா ஒன் என்ற விஞ்ஞானப் படத்தை எடுத்து வருகிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான ரயில் சண்டைக்காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

எந்திரன் வெளியான பிறகு, ஷாரூக்கான் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம் அந்த ரயில் சண்டைக் காட்சி எந்திரனில் இடம்பெற்றது போலவே அச்சு அசலாக வந்திருந்ததுதானாம்.

இதே காட்சி ரோபோட்டில் இடம் பெற்றிருப்பதால், ரோபோட்டை பார்த்து நாம் காப்பி அடித்து விட்டதாக ரசிகர்கள் சொல்வார்களே என்று ஷாருக்கானிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து காட்சியை மாற்றச்சொல்லி விட்டாராம் ஷாரூக்.

ஆனால் அந்த சண்டைக் காட்சிக்கு ஷாரூக் செலவிட்ட தொகை ரூ 3 கோடியாம்.

ஷங்கரை விட பிரமாண்டம்தான்

Monday, October 4, 2010

இன்னமும் எனக்கு வரவேற்பு - ஐஸ்வர்யா ராய்


திருமணத்துக்கு பிறகும் எனக்கு வரவேற்பு இருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த அதே அழகுடன் இப்போதும் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் பிஸியான காஸ்ட்லி நடிகை.

தற்போது ஆக்ஷன் ரிப்யோ, குஜாரிஸ் ஆகிய இந்திப்படங்களில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. என்னைப் பொறுத்த வரை திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு திருமணத்திற்கு பிறகும் இருக்கிறது.

டைரக்டர்களும் எந்தவித பயமும் இல்லாமல் பிரமாண்ட படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடிப்பேன். எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இதனால்கூட எனது படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.

ராவணன் படம் பற்றிய ‌கேள்விக்கு பதில் அளித்த ஐஸ், மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் தோல்வி அடைந்தது. படத்தில் எனக்கு அளித்த பாத்திரத்தில் நன்றாக நடித்தேன். அதில் மன நிறைவு இருந்தது.

ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஏற்கவில்லை. எந்த படமும் வெற்றி பெற வேண்டுமானால் ரசிகர்களுக்கு கதை பிடிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

தமனா காத்திருக்கின்றார்...


நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று நடிகை தமன்னா கூறினார். கேடி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, சுறா, படிக்காதவன் என ஏராளமான படங்களில் நடித்தவர் தமன்னா.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால் இவருக்கு கைவசம் இப்போது ஏராளமான படங்கள்.

ஆனாலும் தமன்னா தடுமாறவில்லை. நிதானமாக கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் கூறியதாவது: எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.

கல்லூரி படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது. அதைப் போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.

கல்லூரி படம் போன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

அனுஷ்காவிற்கு கிடைத்த வாய்ப்பு


மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தவர் இலியானா.இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்து இறுதியில் அந்த வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு போனது. அப்போதும் நான் ரெடி என்று கி‌‌ரீன் சிக்னல் கொடுத்தார் இலியானா.

ஆனால் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவில்லை விக்ரம். அவர் நடிக்கவிருப்பது மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில்.

இயக்குனர்கள் மாறிய கால இடைவெளியில் இலியானாவின் கால்ஷீட் காலாவதியாக இப்போது அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார் விஜய். கதை பிடித்திருப்பதால் விக்ரம் ஜோடி அனேகமாக அனுஷ்காதான் என்கிறார்கள்.