Sunday, October 5, 2008
Wednesday, October 1, 2008
விக்ரம் - ஐஸ்வர்யா ஜோடி
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்துக்கு அசோகவனம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இந்தி மற்றும் தெலுங்குப் படத்துக்கு ராவண் எனப் பெயர் சூட்டியுள்ளார் மணிரத்னம்.அசோகவனத்தின் நாயகன் விக்ரம். அவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய். பல முன்னணி நடிகர்களுடன் ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
இதன் இந்திப் பதிப்பில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக அபிஷேக்பச்சன் நடிக்கிறார். அமிதாப்பச்சனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து ரஜினி-மம்முட்டி நடிப்பில் தளபதியை உருவாக்கியதுபோல, ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இப் படத்தை மணிரத்னம் உருவாக்கப் போகிறாரராம்.கதாநாயகியை வில்லன் கடத்தி சிறை வைப்பது போலவும் கதாநாயகன் தேடிக் கண்டுபிடித்து அவரை மீட்பது போலவும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். தமிழில் ராவணன் என பெயர் வைப்பது எதிர்மறை பார்வையை உண்டாக்கும் என்பதால் அசோகவனம் என மாற்றியுள்ளார் மணி.விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகள் பலவற்றை இலங்கையில் படமாக்கப் போகிறாராம் மணி். ஏற்கெனவே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை இலங்கையில் எடுத்த அனுபவம் உள்ளவர் மணிரத்னம். ராமாயணத்தின் முக்கியப் பகுதி நடைபெற்ற இடம் என்பதால் இலங்கையில்தான் படப்பிடிப்பு என்பதில் அவர் உறுதியாக உள்ளாராம்.இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது. இளம் நடிகர் ஒருவர் அசோகவனம்- ஒரு கிலோ மீட்டர் எனும் தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நிச்சயம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார் என கூறப்படுகிறது.ஆனால் சட்டப்படி தடுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்போதே மாற்றுத் தலைப்பையும் யோசித்து வருகிறார் மணிரத்னம் என்கிறார்கள்.
Subscribe to:
Comments (Atom)